Saturday, 9 April 2016

end-to-end encription

கள்ளன் பெரிசா காப்பான் பெரிசா?
மெயில், ஃபேஸ்புக், வாட்ஸப் என ஆன்லைன் மூலம் பரிமாறப்படும் ஒரு தகவல், சமூக குற்றங்களுக்கு ஆதாரமாக அமையும் எனில் அந்தத் தகவலை போலீஸார், அந்தந்த நிறுவனங்களில் பதியப் பட்டிருக்கும் களஞ்சியத்திலிருந்து பெற்று அது குறித்த வழக்கினைத் தொடர்வார்கள்.
அதாவது இருவர் பகிர்ந்த தகவல்கள் பகிரும் சேவையை வழங்கும் நிறுவனத்திடம் சேகரமாகி இருக்கும். அதை போலீஸார் கேட்டுப் பெறுவார்கள்.
சமீபத்தில் அது போல தகவல் கேட்டதற்கு, அந்த நிறுவனங்கள், தன் நிறுவனத்தை நம்பி தமது க்ளயண்டுகள் பரிமாறிக்கொண்ட தகவல்களைத் தர இயலாது எனச் சொல்லிவிட்டன..
போலீசும் ஏதேதோ செய்து பார்த்தது.
எதற்கு வீண் வம்பு எனச் சொல்லி, இப்போது அந்நிறுவனங்கள் end- to -end encryption (whatsApp) என ஒன்றைக் கொண்டு வந்து விட்டன.
அதாவது நாம் அந்த ஆப்ஷனைத் தேர்வு செய்தால், நாம் மற்றவரோடு பேசும் தகவல்கள் உடனேயே அழிக்கப்பட்டுவிடும். எவராலும்,..சைபர் ஹேக்கர்ஸாலும் கூட எதிர்காலத்தில் பார்க்க இயலாது.
இது நமக்கு சேஃப்டியா அல்லது பாதுகாப்புக்கேடா?
பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.
கள்ளனும் பெரிசல்ல, காப்பானும் பெரிசல்ல, இடையில் இருக்கிறானே ஒருவன். அவனே பெரியவன். wink emoticon

No comments:

Post a Comment